You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டன் விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த விமானம் - என்ன நடந்தது?
லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் சிறிய விமானம் தீப்பற்றி விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் விமானம் தீப்பிடித்த தகவல் வந்ததாக எஸ்செக்ஸ் காவல்துறை தெரிவித்தது.
எனினும், இந்த விமான விபத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விமான விபத்தையடுத்து சவுத்எண்ட் விமானம் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த எஸ்யூஇசட் 1 (SUZ1) விமானம் நெதர்லாந்தைச் சேர்ந்த (Zeusch Aviation) நிறுவனத்துக்குச் சொந்தமானது. விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்த விமானம் கிரிஸ் தலைநகர் ஏதென்ஸிலிருந்து குரோஷியாவின் புலா வழியாக சவுத்எண்ட் வந்தது. அதன்பின், நெதர்லாந்து செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு