You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி : "மோதி மிகவும் நல்லவர், ஆனால் கடினமானவர்" - டிரம்ப்
தென் கொரியாவில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், மோதி மிகவும் நல்லவர் என்று குறிப்பிட்டார். "மோதி மிகவும் நல்லவர். ஆனால் கடினமாவர். ஒரு தந்தையைப் போன்றவர்" என்று பேசியதுடன், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலை தான் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
அணு ஆயுதங்கள் கொண்ட வலிமையான இரு நாடுகள் சண்டையிடுகிறார்கள் என்றதும் தான் அதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், முதலில் மோதி ஒப்புக் கொள்ளவில்லை, ஆனால் இரண்டு நாட்கள் கழித்து இரு தரப்பும் ஏற்றுக் கொண்டனர் என்று பேசினார்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து மூன்றாவது தரப்பு ஈடுபாடு எதுவும் இல்லை என்று இந்தியா இந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்து வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு