You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரப் பிரதேசம்: மின்சார திருட்டுக்கு எதிரான நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கோவில்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கக்கு பகுதியில் மின்சார திருட்டுக்கு எதிரான நடவடிக்கையின் போது கோவில் ஒன்று கண்டறியப்பட்டது. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஆக்கிரமிப்பு நடந்துள்ளதாக நிர்வாகம் தெரிவிக்கிறது. இங்கு என்ன நடக்கிறது, என்ன மாதிரியான நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன?
"மின்சாரம் திருடப்படும் பல சம்பவங்கள் நடைபெறுகிறது. மக்கள் இங்கு வரமுடியவில்லை. எனவேதான் நாங்கள் இங்கு வந்தோம். இங்கு வந்தபோது கோவில் இருப்பதை நாங்கள் பார்த்தோம். கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தை கட்டப்பட்டுள்ளதை கண்டறிந்தோம். நாங்கள் அதை சுத்தப்படுத்துகிறோம்." என்கிறார் சம்பல் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர பென்சியா.
நகரில் பல்வேறு ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த கோவில் மீது மொத்த கவனமும் குவிந்துள்ளது. இதனோடு சம்பலில் ஏற்பட்ட வன்முறை குறித்தும் பேசப்படுகிறது. சம்பலில் 1976, 1978 மற்றும் 1992 ஆகிய ஆண்டுகளில் வன்முறைகள் நடைபெற்றுள்ளன.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)