பேட் கம்மின்ஸ்: உலகக்கோப்பையை வென்றுவிட்டு எளிமையாக நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன்

பேட் கம்மின்ஸ்: உலகக்கோப்பையை வென்றுவிட்டு எளிமையாக நாடு திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் முடித்த பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் நவம்பர் 21ஆம் தேதி நாடு திரும்பினார்.

விமானம் மூலம் சிட்னி சென்றவடைந்த பேட் கம்மின்ஸ் உள்பட இதர ஆஸ்திரேலிய வீரர்களை வரவேற்க பெரியளவில் ரசிகர்கள் யாரும் திரளவில்லை. விமான நிலையத்தில் அவருடன் பணியாளர்களும் தென்படவில்லை.

உலகக்கோப்பையை வென்றிருந்தபோதிலும் சாதாரண பயணியை போலவே பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி தனது உடைமைகளை பேட் கம்மின்ஸ் எடுத்துச் செல்லும் காணொளி வெளியாகியிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)