காணொளி: காஸா நகரை கைப்பற்ற தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

காணொளிக் குறிப்பு, காஸா நகரை கைப்பற்ற தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
காணொளி: காஸா நகரை கைப்பற்ற தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது

காஸா நகரை முழுவதுமாக கைப்பற்ற இஸ்ரேல் வியாழக்கிழமை முதல்கட்ட தாக்குதலை தொடங்கியது.

முன்னதாக காஸா நகரை முழுவதுமாக கைப்பற்ற 60,000 ரிசர்வ் வீரர்களைத் திரட்டுவதாக இஸ்ரேல் புதன் கிழமை அறிவித்தது.

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 தாக்குதலால் இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் ஹமாஸால் கொல்லப்பட்டனர். மேலும் இஸ்ரேலிலிருந்து 251 பேர் ஹமாஸால் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்ட பின் இந்த மோதல் தொடங்கியது.

ஹமாஸூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேலின் தாக்குதலில் 60,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு