You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருடப்பட்ட லாரியை நிறுத்த தொங்கியபடியே பயணித்த போக்குவரத்து காவலர்
திருடிச் செல்லப்பட்ட லாரியை நிறுத்த அதன் மீது போக்குவரத்து காவலர் ஏறிய நிலையில் அவரோடு சேர்த்து சுமார் 5 கிலோ மீட்டருக்கு மர்ம நபர் ஒருவர் லாரியை ஓட்டிச்சென்ற சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் fast tag கட்டணம் செலுத்த நிறுத்தப்பட்ட,
லாரியை மர்ம நபர் திருடிச்சென்றதாக காவல்துறை கூறுகிறது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாகனத்தை தடுக்க முயன்ற போக்குவரத்து உதவி ஆய்வாளரை லாரியின் முன்பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் லாரியை மர்ம ஓட்டிச்சென்றார். காயங்கள் ஏதுமின்றி உதவி ஆய்வாளர் லாரியில் இருந்து இறங்கிய நிலையில், மறைமலைநகர் பகுதியில் தடுப்பு சுவர்மீது மோதி லாரி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, மர்மநபரை கைது செய்து லாரியை மீட்ட காவல்துறையினர்இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு