You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புயலில் சிக்கி ரஷ்ய கப்பல் இரண்டாக உடையும் காட்சி
கருங்கடலில் 29 பணியாளர்களுடன் சென்ற இரண்டு ரஷ்ய எண்ணெய் கப்பல்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் இருந்து எண்ணெய் கசிந்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் தெற்கு போக்குவரத்து வழக்குரைஞர் அலுவலகத்தால் டெலிகிராமில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், பலத்த புயலுக்கு மத்தியில் கப்பல்களில் ஒன்று பாதியாக உடைந்து மூழ்கியுள்ளது, கடலில் எண்ணெய் கசிவின் சுவடுகள் தென்படுகின்றன. பிபிசியால் அந்த வீடியோவை சரிபார்க்க முடியவில்லை.
"கருங்கடலில் ஏற்பட்ட புயலின் விளைவாக, வோல்கோன்ஃப்ட்-212 மற்றும் வோல்கோன்ஃப்ட்-239 ஆகிய இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மூழ்கின" என்று ரஷ்யாவின் கடல் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நிறுவனமான ரோஸ்மோரெக்ஃப்ளாட் (Rosmorrechflot) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கும், யுக்ரேனிடம் இருந்து ரஷ்யா ஆக்ரமித்துள்ள கிரைமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் நீரிணையில் (Kerch Strait) இந்த சம்பவம் நடந்துள்ளது.
"இரு கப்பல்களிலும் 15 மற்றும் 14 பேர் குழுக்கள் இருந்துள்ளனர். கடலில் எண்ணெய் கசிவு பெரியளவில் ஏற்பட்டுள்ளது" என்று அது தெரிவித்துள்ளது. இரண்டு எண்ணெய்க் கப்பல்களும் சுமார் 4,200 டன் எண்ணெய் ஏற்றும் திறன் கொண்டவை என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமைத் தெரிவித்துள்ளது.
முழு விவரம் காணொளியில்...
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)