சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அடிக்கடி சர்ச்சையாவது ஏன்? அங்கு என்ன நடக்கிறது?

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அடிக்கடி சர்ச்சையாவது ஏன்? அங்கு என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை எனக் கூறப்படும் மேடையின் மீது ஏறி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கடவுளை தரிசிக்கக்கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட பதாகை, அந்தக் கோவில் தொடர்பான சர்ச்சையை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்ந்து சர்ச்சையில் அடிபடுவது ஏன்?

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி துவங்கிய நிலையில், திருத்தேர் விழாவையொட்டி பொதுமக்கள் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் கனகசபையில் ஏறி வழிபடத் தடை விதிப்பதாக கோவிலை நிர்வகித்துவரும் தீட்சிதர்கள் பதாகை ஒன்றை வைத்தனர்.

இதற்குப் பக்தர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ஜூன் 24ஆம் தேதியன்று இந்து சமய அறநிலையத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் அங்கு வந்த அந்தப் பதாகையை அகற்ற முயன்றனர்.

அதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் அப்போது திரும்பிச் சென்றுவிட்டனர். செயல் அலுவலர் அளித்த புகாரில் 11 தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்

படத்தொகுப்பு & ஒளிப்பதிவு: ஜனார்த்தனன் மாதவன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: