You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் எம்ஜிஆர் பிறந்த வீடு இன்று எப்படி இருக்கிறது? - பிபிசி தமிழ் கள ஆய்வு
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்ததை அறியாதவர்கள் இருக்க முடியாது . திரைத்துறையிலும் தமிழ்நாட்டு அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
எம்ஜிஆர் இலங்கையில் பிறந்தவர். இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதியின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நாவலபிட்டி என்ற பிரதேசத்திலேயே, 1917ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தார்.
நாவலபிட்டி நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கிராமமே கல்லாறு (இன்று கல்லோய என சிங்கள பெயரைக் கொண்டு அழைக்கப்படுகின்றது). தேயிலை தொழிலைச் செய்யும் மக்களுக்காக ஆங்கிலேயர்களால் கல்லாறு பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்ட லயின் அறையொன்றிலேயே அவர் பிறந்துள்ளார்.
எம்.ஜி.ஆர் கல்லாறு பகுதியில் பிறந்தார் என்பதற்கு அவர் பிறந்ததாகக் கூறப்படும் வீடே தற்போது சாட்சியாக விளங்குகின்றது. ( முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்