பிரிந்துபோன ஜப்பானிய மகனை 19 ஆண்டுகள் கழித்து சந்தித்த பஞ்சாப் தந்தை

பிரிந்துபோன ஜப்பானிய மகனை 19 ஆண்டுகள் கழித்து சந்தித்த பஞ்சாப் தந்தை
பிரசுரிக்கப்பட்டது

ஜப்பானில் வசிக்கும் மகன் 19 வருட இடைவெளிக்குப் பிறகு பஞ்சாபில் வசிக்கும் தனது தந்தையுடன் மீண்டும் இணைந்துள்ளனர். அதன் சாட்சிதான் இந்தக் கண்ணீர்.

ஜப்பானில் பிறந்த ரின் தகஹாட்டாவுக்கு சுமார் இரண்டு வயது இருக்கும் போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர்.

அமிர்தசரஸில் வசிக்கும் சுக்பால் சிங், 2002-ஆம் ஆண்டு ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிந்தனர்.

கடந்த 2007-இல் ஜப்பானில் இருந்து திரும்பிய பிறகு, சுக்பால் தனது மகன் மற்றும் மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை.

ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது தந்தையைச் சந்தித்த ரின், ஒரு தந்தை மட்டுமல்ல, ஒரு சிறிய சகோதரி மற்றும் ஒரு புதிய குடும்பத்தையும் பெற்றுள்ளார்.

சுக்பால் சிங்கைப் பொறுத்தவரை, அவர் தனது மகனுடன் மீண்டும் இணைந்ததை, முடியக்கூடாத ஓர் இனிமையான கனவாகப் பார்க்கிறார்.

ரின் தகஹாட்டா தனது தந்தையைக் கண்டுபிடிக்க முடிவு செய்த தருணத்தை விவரிக்கிறார், இந்தக் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)