You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகையுடன் இருந்த தொடர்பால் கைதாகிறாரா?
பாலியல் தொடர்பை மறைக்க நடிகைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைதாகக் கூடும் என்பதால் அந்நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள ட்ரம்ப் டவர் கட்டடத்திற்கு வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் காவல்துறையின் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவலர்களும் முழு சீருடை அணிந்து பணியில் இருக்கவும், காவல்துறையின் ஒவ்வொரு அங்கத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுவதாக பிபிசியின் அமெரிக்கக் கூட்டாளியான சி.பி.எஸ் தெரிவித்துள்ளது.
ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க, பெரும்பணம் கொடுத்து அவரை மௌனமாக்கியதாக கூறப்படும் புகாரின் பேரில் ட்ரம்ப் மீது மன்ஹாட்டன் அரசு வழக்கறிஞர் கிரிமினல் வழக்குப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்