உத்தரபிரதேச மாநிலம் முழுதும் உள்ள பசுக்களை கருவுறச் செய்யும் ஒற்றைக் காளை - காணொளி
உத்திரபிரதேச மாநிலம் ஹாப்பூரில் உள்ள உறைந்த நிலை விந்து உற்பத்தி மையத்தில் வளர்ந்து வருகிறது 10 வயதான கோரக் என்ற காளை மாடு. கிழக்கு உத்திர பிரதேசம் மற்றும் மேற்கு பிகாரில் காணப்படும் உள்நாட்டு மாட்டினமான கங்காத்ரி இனத்தைச் சேர்ந்தது.
கங்கை கரைகளில் அதிகம் காணப்பட்ட இந்த மாடுகளின் இனம் தற்போது அழிந்து வருகிறது.
அந்த மாட்டினத்தைப் பாதுகாக்கவும், உள்நாட்டு மாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்கவும், கோரக் என்ற இந்த காளையின் விந்தணு அம்மாநிலம் முழுவதும், கங்காத்ரி பசுக்களுக்கு கருவுறுதலுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்த காரணங்களுக்காக கோரக் காளைக்கு பிரத்யேக கவனிப்பு மற்றும் பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
2019-ஆம் ஆண்டு முதல் இந்தக் காளையின் விந்தணு எடுக்கப்பட்டு கருவுறுதலுக்காக அனுப்பட்டு வருகிறது. இதுவரை 2019-ஆம் ஆண்டில் 50,000 டோஸ் விந்துகள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.
வாரத்திற்கு இரண்டு முறை எடுக்கப்படும் இதன் விந்தணுக்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து கோரக்கின் விந்தணு தேவைப்படும் பசு உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



