You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடல் முழுவதும் பச்சைக் குத்திக்கொள்ள ஆர்வம் காட்டும் தாய்லாந்து பெண்கள்
யந்த்ரா பச்சைக் குத்துதல் எனும் முறை மூலம் பாதுகாப்பு, பலம், அதிர்ஷ்டத்தின் மந்திர சக்திகளை பெறலாம் என தாய்லாந்தில் நம்பப்படுகிறது. ஆனால் இந்த முழு உடல் யந்த்ரா பச்சைக் குத்துதல் முறை என்பது பெண்களுக்கு செய்யக் கூடாத ஒன்றாக முன்பு இருந்தது.
இப்போது பல தாய்லாந்து பெண்கள் அதனை உடைக்க விரும்புகிறார்கள். ஆண்களைப் போல உடல் முழுவதும் யந்த்ரா பச்சைக் குத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
தையற்கலைஞரான ஜீருன் ஷின்-மார்ட் தன் உடல் முழுவதும் பச்சைக் குத்தியுள்ளார்.
“என் உடலில் புலி, எருது, காண்டாமிருகம், தேரை, பல்லி, குரங்கு, மாக்பை, கெமர் மற்றும் பாலி வாக்கியங்கள் உள்ளன. 14 ஆண்டுகளுக்கு முன் பச்சைக் குத்த தொடங்கினேன். எனது முதல் டாட்டூ கழுத்தில் குத்தப்பட்டது.
நான் எனது உடலை அசுத்தப்படுத்திவிட்டேன் என மக்கள் சொல்கிறார்கள். எனது செயலுக்காக பெற்றோர் வெட்கப்படுகிறார்களா எனவும் கேட்டனர்.
நான் எனது அம்மாவிடம் இதைக் கேட்டேன். இது ஒன்றும் மக்களின் பிரச்னையல்ல என்று அவரும் கூறிவிட்டார். இன்னும் நிறைய வடிவங்கள் பச்சைக் குத்திக்கொள்ள ஆசை உள்ளது, ஆனால் என் உடலில் இடம் இல்லை.” என்று கூறுகிறார் ஜீருன் ஷின்-மார்ட்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)