You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தடைகளைத் தாண்டி திரைத்துறையில் தடம்பதிக்கும் காஷ்மீர் பெண்கள் - காணொளி
"கடந்த 6 வருடங்களாக இந்தியத் திரைத்துறையில் நடிகையாகப் பணியாற்றி வருகிறேன். 10-க்கும் மேற்பட்ட படங்கள், 5-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் பணியாற்றியுள்ளேன்," என உற்சாகமாகப் பேசுகிறார் காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஃபர்ஹானா பட்.
காஷ்மீரின் பெண்கள் பலரும் திரைத்துறையில் ஆர்வத்துடன் நுழைந்து, சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் நடிகை ஃபர்ஹானா பட், இயக்குநர் அனீஷா கான் மற்றும் தயாரிப்பாளர் மிஸ்பா அலி ஆகியோருடன் பிபிசி கலந்துரையாடியது.
"இந்தத் துறையில் பெண்கள் நுழைவது எவ்வளவு சிரமமோ, கிடைத்த இடத்தை தக்கவைத்துக்கொள்வது அதை விடச் சிரமம். இன்று வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. மக்களின் பார்வையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இதை ஏற்றுக்கொள்கிறார்கள், சமூகம் ஏற்றுக்கொள்கிறது, ஆனாலும் போராட்டம் இன்னும் தொடர்கிறது." என்கிறார் ஃபர்ஹானா.
திரைப்பட இயக்குநரான அனிஷா, "இந்த வேலை எனக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது. திரையில் நமது படைப்பைப் பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். நம்முடைய வேலைக்காக மக்கள் நம்மை பாராட்டுவது ஒரு அற்புதமான உணர்வு" என்று கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)