நேபாளத்தில் நிலநடுக்கம், 6 பேர் பலி: டெல்லியில் உணரப்பட்டது

பட மூலாதாரம், Getty Images
நேபாளத்தில் ஏற்பட்ட 6.3 அளவிலான நிலநடுக்கம் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் உணரப்பட்டது.
டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை இரண்டு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்தியாவின் நில நடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பிபிசி நேபாளி சேவையிடம் பேசிய நேபாளத்தின் டோட்டி மாவட்ட தலைமை மாவட்ட அதிகாரி கல்பனா ஷ்ரேஸ்தா
டெல்லி தலைநகர் பகுதியில் சுமார் 20 விநாடிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கம் நவம்பர் 9ஆம் தேதியன்று 1:57 மணிக்கு ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது.
டெல்லியில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு பலமாக இருந்தது. பல பகுதிகளில் இரவு நேரத்திலேயே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
நிலநடுக்கத்தின்போது செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை
நிலநடுக்கம் ஏற்படும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அதன் இணையதளத்தில் சில அறிவுரைகளைக் குறிப்பிட்டுள்ளது.
- அமைதியாக இருங்கள், மற்றவர்களையும் சமாதானப்படுத்துங்கள்.
- நிலநடுக்கத்தின் போது, கட்டடங்களில் இருந்து விலகியிருக்கும் திறந்த வெளி தான் பாதுகாப்பான இடம்.
- நீங்கள் வீட்டிற்குள் இருந்தால், மேசை, படுக்கை அல்லது கதவுகளின் கீழ் மற்றும் உள்ளே சுவர்கள் மற்றும் படிக்கட்டுகளுக்கு எதிராக மறைந்து கொள்ளவும். கண்ணாடி கதவுகள், கண்ணாடி பலகைகள், ஜன்னல்கள், வெளிப்புற கதவுகளிலிருந்து விலகி இருங்கள். நெரிசலைத் தவிர்க்க, கட்டடத்தை விட்டு வெளியே செல்ல அவசரப்பட வேண்டாம்.
- நீங்கள் வெளியில் இருந்தால், கட்டடங்கள் மற்றும் மின் கம்பிகளில் இருந்து விலகிச் செல்லவும்.
- திறந்த வெளிக்கு வந்துவிட்டால், நில அதிர்வுகள் நிற்கும் வரை அங்கேயே இருங்கள்.
- வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தால், முடிந்தவரை விரைவாக வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்திலேயே இருங்கள்.
- அனைத்து செல்லப்பிராணிகள், வளர்ப்பு உயிரினங்களை பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய இடத்திலிருந்து தப்பிப்பதற்காக விடுவிக்கவும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்