தள்ளுமுள்ளு, காயம்; காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மாறிமாறி குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன?
தள்ளுமுள்ளு, காயம்; காங்கிரஸ், பாஜக தலைவர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு: நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சும் அதைத் தொடர்ந்த சர்ச்சைகளும் தற்போது புதிய வடிவம் எடுத்திருக்கிறது.

தள்ளுமுள்ளு, பேரணி, தலையில் கட்டு, பரஸ்பரம் சரமாரி குற்றச்சாட்டுகள் என, இந்த விவகாரம் வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை முன்பு, அம்பேத்கர் குறித்த அமித்ஷா பேச்சைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

அம்பேத்கர் சிலையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு பேரணியாக சென்றபோது இந்தியா கூட்டணி மற்றும் என்.டி.ஏ கூட்டணி எம்.பிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சாரங்கி, "ராகுல் காந்தி ஒரு எம்.பியை தள்ளினார். அந்த எம்.பி என் மீது விழுந்ததில் நான் கீழே விழுந்தேன்" என்றார்.

இதனைத் தொடர்ந்து, தலையில் காயமடைந்திருந்த பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் தலையில் கட்டு போடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி என்ன கூறினார்? நாடாளுமன்ற வளாகத்தில் இன்று என்ன நடந்தது? விரிவாக காணொளியில்...

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)