You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ‘மிதிவண்டி வாங்கித் தராத ஒருவரை திருமணம் செய்ய முடியாது’
நைஜீரியாவில் மிதிவண்டிகள் ஒரு பிரபலமான போக்குவரத்து முறை அல்ல.
ஆனால், வடகிழக்கு நைஜீரியாவின் போர்னோவில் உள்ள அஸ்கிரா உபா கிராமத்துப் பெண்களுக்கு, அது உயிர்நாடியாக விளங்குகிறது.
அதனால், இங்கு திருமணத்திற்கான சமயம் வரும்போது, மணமகன் மற்ற பொருட்களுடன் மிதிவண்டிக்கான பணத்தையும் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் திருமணத்தின் போது, மிதிவண்டி பரிசாக வழங்கப்படும்.
"மணமகனாக ஒருவர் ஒரு மிதிவண்டியை வழங்கவில்லை என்றால், அவர் தகுதியற்றவராகக் கருதப்படுவார், ஏனெனில் அதுவே மிக முக்கியமான பொருள்" என்கிறார் மிதிவண்டி விற்பனையாளர் ஹுசைரு சையிது.
(இந்த காணொளியில் மிதிவண்டியின் விலை இந்திய நாணய மதிப்பில் குறிப்பிடப்படுகிறது.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு