You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'Bloody Beggar' படம் ஜவ்வுமிட்டாய் போல இழுவையா? ரசிகர்கள் கூறுவது என்ன?
நடிகர் கவின் நடிப்பில் ‘பிளடி பெக்கர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
'டார்க் காமெடி' வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் கவின் முக்கியக் கதாபாத்திரத்தில் ‘பெக்கராக’ அதாவது பிச்சைக்காரராக நடித்துள்ளார்.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ போன்ற ‘டார்க் காமெடி’ திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அவரது உதவியாளராக 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வந்த சிவபாலன் முத்துக்குமார் இந்தப் படத்தின் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களில் நடித்த ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் இதை பற்றி என்ன சொல்கின்றனர்? மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)