You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முகமது ஷமி கேட்ச்சை தவறவிட்டபோது ரோஹித் சர்மா செய்தது என்ன?
விராட் கோலியின் சாதனை சதம், ஸ்ரேயாஸ் அய்யர், ரோகித் சர்மா, கில் ஆகியோரின் அற்புதமான பேட்டிங், முகமது ஷமியின் மிரட்டல் பவுலிங் ஆகியவற்றால் இந்திய அணி உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு அடித்தளமாக இருந்தது ரோஹித் சர்மாவின் (47) அதிரடியான ஆட்டம்தான். அவர் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தில் கோலி, கில் இருவரும் பயணித்து அணியை வழிநடத்தினர்.
இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கேப்டன் வில்லியம்சன் - மிட்செல் ஜோடி சிறப்பாக ஆடி இந்தியாவை ஒருகட்டத்தல் மிரட்டிவிட்டனர். பின்னர் முகமது ஷமியின் அற்புதமான பவுலிங்கால் இந்திய அணி மீண்டும் ஒருமுறை மீண்டு வந்தது.
கோலி, ரோகித், ஷமி ஆகியோர் படைத்த சாதனைகளால் இந்தப் போட்டி இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆட்டமாக மட்டுமின்றி, வரலாற்றில் இடம்பிடித்த ஆட்டமாகவும் மாறிப் போனது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)