You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரட்டை குட்டிகளை பெற்றெடுத்த யானை, வலியில் என்ன செய்தது தெரியுமா? - காணொளி
தாய்லாந்தில் ஆசிய யானை ஒன்று இரட்டை யானைக் குட்டிகளை ஈன்றெடுத்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இது ஓர் அதிசயம் என அந்த யானையியின் பாகன்கள் கூறுகின்றனர். 36 வயதான சம்சுரி என்ற பெண் யானை, ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குட்டியை ஈன்றுள்ளது. இரண்டாவது யானைக் குட்டி பிறந்தபோது அது அங்கிருந்த எல்லோரையும், ஏன், அந்தத் தாய் யானையையும் கூட ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
தாய் யானையை கட்டுப்படுத்தியபோது பராமரிப்பாளர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. தற்போது, தன் குட்டிகளை தாய் யானை ஏற்றுக்கொண்டது. யானைகளில் ஒரு சதவிகித பிரசவங்களில் மட்டுமே இரட்டை குட்டிகள் பிறக்கும். வனங்களில் 8,000-11,000 ஆசிய யானைகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. காடுகள் அழிப்பு, ஆக்கிரமிப்பு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவற்றால் அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)