விக்ரம் லேண்டர் நிலாவில் என்ன செய்கிறது? - இஸ்ரோ வெளியிட்ட புதிய படங்கள்

காணொளிக் குறிப்பு, விக்ரம் லேண்டர் நிலாவில் என்ன செய்கிறது? - இஸ்ரோ வெளியிட்ட புதிய படங்கள்
விக்ரம் லேண்டர் நிலாவில் என்ன செய்கிறது? - இஸ்ரோ வெளியிட்ட புதிய படங்கள்
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான்-3 திட்டத்தின் முதலிரு இலக்குகளை ஏற்கனவே எட்டிவிட்ட இஸ்ரோ, மூன்றாவது இலக்கில் அடுத்தக்கட்ட தகவல்களை பகிர்ந்துள்ளது.

தற்போது விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை முதன்முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலாவில் பிரக்யான் ரோவர் படம்பிடித்த விக்ரம் லேண்டரின் முழுமையான புகைப்படத்தை முதல்முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

நிலாவின் மேற்பரப்பில் ஊர்ந்து ஆய்வு செய்யும் பிரக்யான் ரோவர் ஆக்சிஜன், கந்தகம் உள்ளிட்ட சில தனிமங்கள் இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அங்கே ஹைட்ரஜன் உள்ளதா என்பது இன்னும் தெரிய வரவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: