You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கங்குவா: சூர்யா - ‘சிறுத்தை’ சிவா கூட்டணி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா?
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இருவருக்கும் சிறு இடைவெளிக்குப் பிறகு வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குவா.
ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இத்திரைப்படம், ‘பீரியட் டிராமா’ என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. டிரெய்லரில் சூர்யாவின் தோற்றமும், சண்டைக் காட்சிகளும் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன.
படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், உலகம் முழுதும் இப்படம் ரூ.2,000 கோடி வசூல் செய்யும் என இயக்குநர் சிவா கூறியிருந்தார். இந்தியத் திரையுலகமே படத்தை வியந்து பார்க்கப் போகிறது என்று நடிகர் சூர்யா கூறியிருந்தார்.
இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கங்குவா திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் சொல்வது என்ன?
இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)