You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"புதின் என்னை ஏமாற்றிவிட்டார்"- டிரம்ப் இவ்வாறு சொல்லக் காரணம் என்ன?
"புதின் என்னை ஏமாற்றிவிட்டார்"- டிரம்ப் இவ்வாறு சொல்லக் காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டன் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் செக்கர்ஸில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ரஷ்ய அதிபர் புதின் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறுனார்.
முதலில், "நாங்கள் ஏழு போர்களை முடித்து வைத்துள்ளோம். தீர்க்க முடியாத, பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத போர்கள் அவை. இதை நாங்கள்தான் செய்தோம். அமெரிக்கா அவற்றில் ஏழு போர்களை தீர்த்துள்ளது." எனப் பேசினார்.
பின், "அதிபர் புதின் உடனான உறவால், ஒன்றை தீர்ப்பது எளிதாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார். ரஷ்யா- யுக்ரேன் போரில் அவர் உண்மையில் ஏமாற்றிவிட்டார்." என்றார்.
முழு விவரம் காணொளியில்..
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு