You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல் முதன் முறையாக ஒப்படைப்பு - ஹமாஸ் கூறியது என்ன?
காஸா போர் நிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உடல்களை முதன்முறையாக ஹமாஸ் ஒப்படைத்தது.
அக்டோபர் 7-ம் தேதி தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலுக்கு இதுதான் மிகவும் சோகமான நாளாக இருக்கக் கூடும்.
ஷிரி பிபாஸ் மற்றும் அவரது மகன்களான ஏரியல் மற்றும் ஃபிர் ஆகியோரது உடல்களும் இவற்றில் இருந்தன. டெல் அவிவில் உள்ள தடயவியல் நிறுவனத்தை நோக்கி உடல்களை சுமந்து சென்ற வாகனங்கள் கடந்து சென்றபோது, ஆதரவாளர்கள் சாலையோரம் அமைதியாக நின்றனர்
நவம்பர் 2023 இல் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் இந்த நான்கு பணயக்கைதிகளும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதற்கு ஹமாஸ் ஆதாரம் தரவில்லை.
ஹமாஸின் கூற்றை இஸ்ரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.
இதைப் பற்றிய முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)