ஐ.என்.எஸ் அரிகாட்: இந்தியா இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலால் சீனாவுடன் போட்டியிட முடியுமா?

ஐ.என்.எஸ் அரிகாட்: இந்தியா இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலால் சீனாவுடன் போட்டியிட முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் அரிகாட் கடற்படையில் இணைந்துள்ளது.

ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பலையடுத்து, கடற்படையில் இணையவுள்ள இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.

அரிஹந்த் கப்பல் 2009-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இந்தியாவில், அணுசக்தியால் இயங்கும் நீண்ட தூர பாலிஸ்டிக் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு 'அரிஹந்த் கிளாஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

அரிஹந்த் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு 'எதிரியை அழிப்பவன்' என்று பொருள். அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் மூலோபாய முக்கியத்துவத்தைப் பொறுத்து இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் காணொளியில்…

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)