You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துருக்கி: விமான நிறுவனத்தில் பயங்கர தாக்குதல் - வெளியான சிசிடிவி காட்சிகள்
எச்சரிக்கை: இந்தக் காணொளியில் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் இருக்கலாம்.
துருக்கி நாட்டின் தலைநகர் அன்காராவில் உள்ள ஒரு விமான நிறுவனத்தின் தலைமையகத்தில் புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், கொல்லப்பட்டதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குர்திஷ் புரட்சிக் குழுவால் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)