காணொளி: ஹெல்மெட் அணிந்தால் முடி உதிருமா?
இந்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. நிறைய பேர் இதை உண்மை என்றும் நம்புகின்றனர்.
ஆனால், 'ஹெல்மெட் அணிந்தால் முடி உதிரும் என்பதற்குஎந்த அறிவியல் ஆதாரமும் இல்லை' என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், ஹெல்மெட்டை தொடர்ந்து அணிந்தால் நிறைய பேருக்கு முடி உதிர ஆரம்பித்திருக்கும்.
அதற்கு காரணம் ஹெல்மெட் அணிவது இல்லை. அதை சரியாக அணியாததுதான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சில சமயங்களில் மிகவும் இறுக்கமாக ஹெல்மெட்டை அணியும்போது, அது தலையில் உராய்வை ஏற்படுத்தலாம்.
அதனால் வியர்வை தலையிலேயே தங்கிவிடும்.
இதனால உச்சந்தலையையோ அல்லது முடியின் வேர்களுக்கு அருகிலுள்ள தோல் பகுதியையோ பாதிக்க வாய்ப்பு உண்டு.
ஹெல்மெட்டின் உட்புறம் அழுக்காகவோ, மிகவும் இறுக்கமாகவோ அல்லது அதில் பூஞ்சைகள் வளர்ந்திருந்தாலோ, அது உங்கள் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அதற்காக ஹெல்மெட் அணியாமல் இருக்கக்கூடாது. இதைத் தடுக்க வேறு வழி உண்டு.
சரியாகப் பொருந்தும் ஹெல்மெட்டை பயன்படுத்தவும்.
ஹெல்மெட்டின் உள்ளே சுத்தமாக வைத்திருக்கவும்.
ஷாம்பூவால் அடிக்கடி தலைமுடியை கழுவவும்.
ஹெல்மெட்டின் கீழ் துணியைக் கட்டிக்கொள்ளவும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



