You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: மக்கள் ஒருவர் மீது ஒருவர் தீப்பந்து வீசும் விநோத விழா
லத்தீன் அமெரிக்க நாடான எல் சால்வடாரில் உள்ள நெஹாபா நகரம் நெருப்புப் பந்துகளால் போர்க்களமாக மாறியது. மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தீப்பந்தை மாறிமாறி வீசும் 103 ஆண்டு பாரம்பரிய விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் துணியை பெட்ரோலில் ஊற வைத்து இறுக்கமாக சுருட்டி அதில் தீ வைத்து வீசுகிறார்கள். 1658ஆம் ஆண்டு நடந்த எரிமலை வெடிப்பினால் மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த விழா நடத்தப்படுகிறது.
சில உள்ளூர்வாசிகளோ, "இந்த தீப்பந்துகள் உள்ளூர் கிறிஸ்தவ துறவி 'புனித ஜெரோனிமோ' எரிமலையின் உள்ளே இருந்த பிசாசுடன் தீப்பந்துகளை வீசி போராடியதை குறிக்கிறது" என்கிறார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு