காணொளி: போர் நிறுத்தம் தொடர்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டும் அமெரிக்கா மற்றும் இரான்
காணொளி: போர் நிறுத்தம் தொடர்பாக பரஸ்பரம் குற்றம்சாட்டும் அமெரிக்கா மற்றும் இரான்
பிரசுரிக்கப்பட்டது
சனிக்கிழமையன்று (2026 ஜூன் 27), ஹோர்முஸ் நீரிணையில் பனாமா கொடியுடன் சென்ற கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது குறித்து இந்த காணொளியை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைமையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு நேரடி பதிலடியாக, இரானின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.
பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக, இரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அரசு ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



