You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சக்திவாய்ந்த ஏவுகணையை சோதித்ததாக கூறும் வட கொரியா- வல்லுநர்கள் கூறுவது என்ன?
கண்டம் விட்டும் கண்டம் பாயும் வகையிலான புதிய திட எரிபொருள் ஏவுகணையை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது.
தாங்கள் இதுவரை பரிசோதனை செய்ததிலேயே இதுதான் சக்தி வாய்ந்த ஏவுகணை என்றும் அந்நாடு கூறியுள்ளது. இந்த பரிசோதனையை வெகுவாக பாராட்டியுள்ள வட கொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி (KCNA), சோதனை வெற்றி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பொதுவாக, திட எரிபொருள் ஏவுகணைகளை திரவ எரிபொருள் ஏவுகணைகளை விட வேகமாக செலுத்த முடியும். மேலும், அவற்றைக் கண்டறிவதும், இடைமறிப்பதும் கடினமானது. தங்களின் இந்த பரிசோதனை எதிரிகளுக்கு அதீத பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், வட கொரியா பயன்படுத்தியிருக்கும் தொழில்நுட்பம் புதியது அல்ல என்றும் முழு செயல்பாட்டுடன் கூடிய திட பொருள் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை (ICBM) உருவாக்க வட கொரியாவுக்கு கூடுதல் நேரமும் உழைப்பும் தேவைப்படும் என தென் கொரியா வெள்ளியன்று தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் ஆயுத திட்டங்களில் இதுமாபெரும் மைல்கல் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். திட எரிபொருள் மூலம் இயங்கும் கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை மூலம் எவ்வித எச்சரிக்கையும் இல்லாமல் அல்லது மிக குறைந்த எச்சரிக்கையை மட்டுமே வெளிப்படுத்தி அமெரிக்காவை வட கொரியாவால் தாக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்