டிடி ரிட்டர்ன்ஸ் விமர்சனம்: சந்தானம் பேய் காமெடியில் கம்பேக் கொடுத்தாரா? – வீடியோ
சதீஷின்(சந்தானம்) காதலியான சோஃபியாவை(சுரபி) புதுச்சேரி டானாக இருக்கும் அன்பரசுவின்(ஃபெப்சி விஜயன்) மகன் பென்னிக்கு கட்டாய திருமணம் முடிக்க முடிவு செய்கின்றனர்.
இந்தத் திருமணத்திற்காக கைமாற்றப்பட்ட பணத்தை திரும்பக் கொடுத்து தனது காதலியை டான் அன்பரசுவிடம் இருந்து காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் இன்று (ஜுலை 28) வெளியாகியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் கதைச் சுருக்கம்.
தமிழ் சினிமாவின் சக்சஸ் பார்முலாக்களில் ஒன்றான ஹாரர் காமெடி வகையைத் தேர்வு செய்துள்ளார் இயக்குநர் பிரேம் ஆனந்த். ‘குளு குளு’, ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ போன்ற சீரியசான படங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடி படத்துக்குத் திரும்பியிருக்கிறார் நடிகர் சந்தானம்.
க்ளிஷேவான காட்சிகளின் மூலம் பார்வையாளர்களை அயர்ச்சியடையச் செய்திருக்கிறார்களா அல்லது காமெடி கேங்ஸ்டர்களை வைத்து கலக்கியுள்ளார்களா?

பட மூலாதாரம், RK ENTERTAINMENT
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



