You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரண்மனை 4: படம் எப்படி இருக்கிறது?
தமிழில் வெளியாகும் பேய், அமானுஸ்யங்களைக் கதைக்களமாக கொண்ட படங்களுக்கு லாஜிக்கை எதிர்பார்த்து யாரும் செல்வதில்லை. 2 மணிநேரம் தொய்வை ஏற்படுத்தாமல், பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் பலரும் இந்த வகை படங்களைப் பார்க்கச் செல்கிறார்கள்.
அந்த வகையில் வணிகரீதியாக ஓரளவுக்காவது வெற்றியடையும் பேய்ப் படங்களை உருவாக்குவதில் முக்கியமானவர் இயக்குநர் சுந்தர்.சி. தற்போது அவர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அரண்மனை 4 என்ற படம்தான் தமிழக திரையரங்குகளில் பேசுபொருளாக உள்ளது.
சமீபகாலமாகவே பெரிதாக தமிழ்ப் படங்கள் ஏதும் வெளியாகாதாதல் மலையாளப் படங்களும், ரீ-ரிலீஸ் படங்களும் தமிழக திரையரங்குகளை நிறைத்து நிற்க, அதற்கு ஒரு இடைவேளை கொடுக்கும் வகையில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே அரண்மனை 1, 2, 3 என இதே கதையில் சுந்தர்.சி மூன்று படங்களை எடுத்திருந்தாலும், தற்போது நான்காவதாக அரண்மனை 4 வெளியாகியுள்ளது. இந்தப் படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? விரிவாக காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)