தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கிறது? பிபிசியின் கள ஆய்வு- காணொளி

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி எப்படி இருக்கிறது? பிபிசியின் கள ஆய்வு- காணொளி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் குறைந்த விலையில் அதிகமான நிலப்பரப்பை வாங்கும் சாத்தியம் உள்ளது. உழைப்பதற்கு தயாரான நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். மதுரையில் இருந்து தெற்கே இயங்கிவரும் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 150க்கும் கூடுதலாக உள்ளது. அங்கு படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு தேவைப்படுகிறது.

பெயர் குறிப்பிட்டு சொல்லத் தக்க தொழில் நிறுவனங்களான ஹெச்.சி.எல்., தினத்தந்தி, ஹட்சன் என ஏராளமான குழுமங்களை தென் மாவட்டங்களை சேர்ந்த முதலாளிகளே நிர்வகித்து வருகிறார்கள். தொழில்துறை வளர்ச்சிக்கு அவசியமான இத்தனை அம்சங்களை ஒருங்கே கொண்டிருந்த போதிலும், தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சியில் பின் தங்குவது ஏன் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

இந்த சூழலை மாற்ற விரும்பும் தமிழ்நாடு முதலமைச்சர், தங்களை தென் தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாகவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்பு, முதலீடுகள் தெற்கு நோக்கி செல்வதை காண முடியும் என்றும் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்திருந்தார்.

என்ன சொல்கிறார்கள் தென் மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினர்?

செய்தியாளர்: சாரதா.வி

ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)