You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக தேர்தல்: பாஜகவை விட 2 மடங்கு தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இரவு 9 மணி நேர நிலவரப்படி, ஆட்சி அமைக்க தேவைப்படும் 113 இடங்களைக் கடந்து 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் வென்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, பாதிக்கும் குறைவான தொகுதிகளிலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால், தேசிய அரசியலில் அந்த கட்சியின் நிலை இன்னும் வலுவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் மூலம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக காங்கிரஸ் உருவெடுக்கக் கூடும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.( முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்