You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை தீயணைப்பு துறையில் இணைந்த இளம் பழங்குடிப் பெண், சோதனைகளை கடந்து சாதனை
மகாராஷ்டிராவை சேர்ந்த பழங்குடிப் பெண் மோகினி பர்மல் மும்பை தீயணைப்பு துறையில் இணைந்துள்ளார்.
திருமணமாகி ஒரே ஆண்டில் கணவனை இழந்த மோகினி பர்மல் கடின உழைப்பால் முன்னேறி அரசுப்பணியில் சேர்ந்துள்ளார்.
கோவிட் சமயத்தில் தனது கணவர் இறந்துவிட இரண்டரை மாதம் கர்ப்பிணியாக இருந்த மோகினி பர்மல் தனது மாமியார் உதவியுடன் படித்து தீயணைப்பு துறைக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
வீட்டு வேலை செய்து தனது மருமகளுக்கு தன்னால் முடிந்த உதவியையும், ஆதரவையும் வழங்கியுள்ளார் மோகினியை மாமியார் சீதாபாய் பர்மல்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)