You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஞ்சாப் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்ட துபாய் போதகரின் ஆதரவாளர்கள் (காணொளி)
பஞ்சாபில் கடந்த வியாழனன்று நூற்றுக்கணக்கான வாள் ஏந்திய இளைஞர்கள் எல்லையோர மாவட்டமான அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையத்தை முற்றுகையிட்ட காட்சி, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்தது.
அம்ரித்பால் சிங் என்ற போதகர் துபாயில் இருந்தபடி இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
29 வயதான அவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஒரு விழாவில், வாரிஸ் பஞ்சாப் டி என்ற குழுவின் தலைவராக தன்னைத் தானே அறிவித்துப் பாராட்டிக் கொண்டு ஆற்றிய உரை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.
இவரது ஆதரவாளரான லவ்ப்ரீத் தூஃபனை போலீஸார் ஆள்கடத்தல் வழக்கு ஒன்றில் கைது செய்திருந்தனர். அவரை விடுவிக்கக் கோரி அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம்தான் பிறகு உச்சம் தொட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் அளவுக்கு தீவிரம் அடைந்தது.
கடைசியில் லவ்ப்ரீத் தூபஃனை சனிக்கிழமை விடுவிப்பதாக காவல்துறை உறுதியளித்த பிறகே அங்கு அமைதி திரும்பியது.
இந்த குழுவை ஆரம்பித்தவர் தீப் சித்து. கடந்த ஆண்டு சாலை விபத்து ஒன்றில் இறந்து விட்ட இவர், 2021ஆம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்திற்காக கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்