தூக்கிக் கொடுத்த ஆர்சிபி - கோட்டை விட்ட பெங்களூரு - சமீபத்திய கிரிக்கெட் சுவாரஸ்யங்கள்
தூக்கிக் கொடுத்த ஆர்சிபி - கோட்டை விட்ட பெங்களூரு - சமீபத்திய கிரிக்கெட் சுவாரஸ்யங்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடையிலான நேற்றைய ஆட்டமும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.
கடைசிப் பந்து வரை நீடித்த இந்த ஆட்டம் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது. ரோலர் கோஸ்டர் ரெய்டு போல அமைந்த இந்த ஆட்டத்தில், நெருக்கடியை சிறப்பாக கையாண்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி வெற்றியை வசமாக்கியது.
கோலி - டுப்ளெஸ்ஸி ஜோடி வழக்கம் போல் சிறப்பான தொடக்கம் தந்து, மேக்ஸ்வெல்லின் அதிரடி சரவெடியால் 212 ரன்களைக் குவித்தும் கூட ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
மும்பை இந்தியன்சுக்கு எதிரான முதல் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தில் நடப்பு ஐ.பி.எல். தொடரை சிறப்பாக தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இது இரண்டாவது தோல்வி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



