You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
15 முள்ளம்பன்றிகளை வைத்து இந்தப்பெண் என்ன செய்கிறார் தெரியுமா? - காணொளி
முள்ளம்பன்றிகள் நாம் அன்றாடம் காணும் விலங்குகள் அல்ல.
ஆனால் அவற்றைப் பற்றிய நம் பிம்பம் பயம் அல்லது அருவெறுப்பு இவற்றில் ஒன்றாக இருக்கும். அதற்குக் காரணம் அவற்றின் தோற்றமும், முட்களும்.
ஆனால், இலங்கையின் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, 15 முள்ளம்பன்றிகளை வளர்ப்பதுடன், அவற்றின் மூலம் தங்கள் வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர்.
சந்திரகாந்தியின் கணவர் பொடிநிலமே, பார்வைக் குறைபாடு உள்ளவர். அதனால் அவரால் வேலைக்குச் சென்று பொருளீட்ட முடியாது.
அதனால் சந்திரகாந்தி தங்களது வளர்ப்பு முள்ளம்பன்றிகளை சுற்றுலாப் பயணிகளிடம் காட்டி அதன் மூலம் வரும் வருமானத்தில், தனது கணவரையும், பள்ளி செல்லும் குழந்தையையும் காப்பாற்றி வருகிறார்.
தயாரிப்பு – ஷர்லி உபுல் குமர, பிபிசி சிங்களம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்