காணொளி: பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
காணொளி: பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
பிரசுரிக்கப்பட்டது
மறைந்த இயக்குநர் கே.பாக்யராஜூக்கு இன்று இறுதிச்சடங்குகள் நடந்தன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து பெசன்ட் நகரில் உள்ள மின் மயானம் வரையிலும் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதில், பாக்யராஜின் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
இறுதியில், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தமிழக காவல்துறையினர் 72 குண்டுகள் முழங்க, பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.
பாக்யராஜ், சனிக்கிழமை (ஜூன் 27) சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



