இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஆணி இதுதானா?

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த ஆணி இதுதானா?
பிரசுரிக்கப்பட்டது

உலகமெங்கும் நடக்கும் மிக முக்கியமான அகழாய்வுப் பணிகளில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உறுதி செய்ய நடத்தப்படும் பணிகளும் ஒன்று. அப்படி நடத்தப்பட்ட அகழாய்வின் மூலமாக கண்டறியப்பட்ட இயேசு கிறிஸ்து அணிந்து இருந்தாகக் கூறப்படும் அங்கி சமீபத்தில் ஜெர்மன் நாட்டின் டிரியர் நகரில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர் தேவாலயத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த அங்கியை இங்கிருக்கும் மக்கள் கிறிஸ்துவின் புனித ஆடையாகக் கருதி வழிபடுகின்றனர். கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இருக்கும் இந்தப் பழைய அங்கி, 1,500 ஆண்டுகளாக இந்த தேவாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வரப்படுகிறது. இயேசு கிறிஸ்து பயன்படுத்தியது என்று நம்பப்படும் இந்த அங்கியை பொதுமக்களால் நாள்தோறும் பார்க்க முடியாது. ஒரு சில தசாப்தங்களுக்கு ஒரு முறை பொது மக்கள் பார்வைக்காக இந்த அங்கி வெளியே வைக்கப்படுகிறது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: