திடீரென மண்ணில் புதைந்த கிணறு - அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
திடீரென மண்ணில் புதைந்த கிணறு - அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென்னந்தோப்பில் இருந்த பாசனக் கிணறு திடீரென்று மண்ணுக்குள் புதைந்தது. கிணற்றை உள்வாங்கியபடி மிகப்பெரிய பள்ளம் உருவாகிப் பெரிதாகி வருகிறது.
இதனால், கிணற்றை ஒட்டி இருந்த மோட்டார் அறையின் ஒரு பகுதி அந்தப் பள்ளத்துக்குள் இடிந்து விழுந்துவிட்டது என்கிறார்கள் அந்த ஊர்வாசிகள்.
சேதுநாராயணபுரம் என்ற ஊரை ஒட்டிய தென்னந்தோப்பு கிணற்றுக்குத்தான் இப்படி நடந்துள்ளது. இந்தக் கிணறு வத்திராயிருப்பை சேர்ந்த முருகவனம் என்ற விவசாயிக்கு சொந்தமானது.




