You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல்: 3,500 ஆண்டுகள் பழைய ஜாடியை உடைத்த 4 வயது சிறுவன் - அடுத்து நடந்தது என்ன?
இஸ்ரேலில் அருங்காட்சியகம் ஒன்றில் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை தவறுதலாக உடைத்த 4 வயது சிறுவன் மீண்டும் அந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த நிகழ்வு நடந்துள்ளது.
இஸ்ரேலின் ஹைஃபா நகரிலுள்ள ஹெக்ட் அருங்காட்சியகத்துக்கு கடந்த வாரம் இஸ்ரேலை சேர்ந்த அன்னா மற்றும் அலெக்ஸ் தம்பதியினர் குடும்பத்தோடு சுற்றிபார்க்க வந்தனர்.
அப்போது, அவர்களின் நான்கு வயது மகனான அரியல் ஹெக்ட் அருங்காட்சியகத்தில் 35 ஆண்டுகளாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கிமு 2200 முதல் 1500 வரையிலான காலகட்டத்தை சேர்ந்த ஜாடியை தவறுதலாக உடைத்துவிட்டான்.
அதுகுறித்துப் பேசிய அரியலின் தாய் அனா, "அம்மா இங்கே பாருங்கள் என்று எனது மகள் என்னிடம் ஏதோ கேட்டாள். நான் எனது மகன் அரியலிடம் இங்கே வா எனக் கூறினேன். அடுத்த நொடி என் பின்னே பெரிதாக ஏதோ உடைந்த சத்தம் கேட்டது. கண்டிப்பாக அது எனது தவறுதான்" என்றார்.
அரியல் உடைத்த ஜாடியை எளிதாக மீண்டும் ஓட்டிவிடலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அருங்காட்சியகத்துக்கு மீண்டும் வந்த அரியலிடம் உடைந்த உண்மையான ஜாடியை போலவே இருக்கும் விலை குறைந்த உடைந்துபோன வேறொரு ஜாடியை கொடுத்த அருங்காட்சியக ஊழியர்கள் அவனையே அதை ஒட்டவைக்கச் செய்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)