விண்வெளிக்கு செல்வதற்கு முன் சுனிதா வில்லியம்ஸ் செய்த பயிற்சிகள் என்ன?

காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ்
விண்வெளிக்கு செல்வதற்கு முன் சுனிதா வில்லியம்ஸ் செய்த பயிற்சிகள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு தேதியன்று யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் என்ற சாதனையைப் படைத்தார்.

அவர் செய்ய வேண்டிய பயிற்சிகள் கடினமானவை. தனது வலிமையை பரிசோதிக்க மலையேறினார், பாலைவனங்களில் நடந்தார். நுரையீரலைப் பரிசோதிக்க அதிக ஆக்சிஜன் இல்லாத அறைகளில் கூட தங்கினார்.

தற்போது நிலையே வேறு. விண்ணில் ஆறரை மாதங்கள் இருந்து, அதிக நாட்கள் விண்ணில் இருந்த பெண்மணி என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்திருக்கிறார்.

"நிறைய உடல் ரீதியிலான பயிற்சிகளையும் மேற்கொள்வோம் . உதாரணமாக, விண்வெளி நடைப் பயிற்சி. பூமியில் 350 பவுண்ட் (158 கிலோ) எடையுள்ள உடையை அணிந்திருக்கிறீர்கள் என்றால் அந்த எடை, நிச்சயமாக விண்வெளியில் ஒரு பொருட்டே அல்ல. இருப்பினும், விண்வெளியாக இருந்தாலும், அந்த உடையை அணிந்து கொண்டு செயல்படுவது சற்று கடினமானது. ஆனால், நாங்கள் வேறு சில செயல்பாடுகளுக்கான பயிற்சிகளையும் மேற்கொள்வோம்.

உதாரணமாக, ரோபோ கை. சில நேரங்களில் விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரருடன் ரோபோ கை பயிற்சி பெறுகிறோம்.

அதைச் செய்ய, எங்களிடம் ஒரு மெய்நிகர் ஆய்வகம் உள்ளது, அதில், அனைத்து வித உணர்வுகளுக்கும் உட்படுவார்கள். முதல் முறையாக விண்வெளிக்கு பயணிப்பவராக இருந்தால், சென்ட்ரிஃபுஜ் (மைய விலக்கு நீக்கி சாதனம்) பயிற்சி எடுக்கிறோம். இது ஒரு சிறந்த பயிற்சி. இது வேடிக்கையாக இருக்கும் என்று கூற மாட்டேன். உங்கள் மீது கேமராவை பொருத்துவார்கள். அதனால், நீங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறீர்கள் என்பது அதில் தெரியும். அனைவரின் முகமும் நசுங்கிப்போய் இருக்கும். கொஞ்சம் அவமானமாக இருக்கும், ஆனால் இது நல்ல பயிற்சி, அதை நாங்கள் செய்ய முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்", என்று விண்வெளிக்கு செல்வதற்கு முன் செய்யும் பயிற்சிகள் குறித்து சுனிதா வில்லியம்ஸ் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.