விஜயகாந்த் மறைவில் மனமுடைந்து போன 45 ஆண்டுகால நண்பர்

காணொளிக் குறிப்பு, சமீபத்தில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
விஜயகாந்த் மறைவில் மனமுடைந்து போன 45 ஆண்டுகால நண்பர்
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் காலமானார். அவர் விஜயகாந்த் மறைந்தது இரண்டு கைகளையும் இழந்ததைபோல் இருக்கிறது என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் விஜயகாந்த்தின் 45 ஆண்டுகால நண்பரான திருப்பதி.

மதுரையில் உள்ள தனது வீடு முழுவதும் விஜயகாந்த் உடன் எடுத்த புகைப்படங்களை மாட்டி வைத்துள்ளார். ஆல்பத்தில் உள்ள சில புகைப்படங்களை காட்டி விஜயகாந்த் உடனான நினைவுகளை அசைபோட்டார்.

மதுரையில் நண்பர்களாக இருந்தபோது எப்படி நட்பாக பழகினாரோ திரையுலகில் சாதித்து பிஸியான நடிகராக உயர்ந்த பிறகும் அதே நட்போடுதான் விஜயகாந்த் பழகியதாக அவர் கூறினார். தனது நண்பர் விஜயகாந்த்தின் உடலை நேரில்போய் பார்க்கும் அளவுக்கு உடலில் தாங்கும் சக்தி இல்லை என்பதால் தொலைக்காட்சியில் பார்ப்பதாக திருப்பதி கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)