ஐசி 814 வெப் சீரிஸ் சர்ச்சை: கந்தஹார் விமானக் கடத்தலில் உண்மையில் ஈடுபட்டது யார்?

காணொளிக் குறிப்பு, நெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ் சர்ச்சை: கந்தஹார் விமானக் கடத்தலில் உண்மையில் ஈடுபட்டது யார்?
ஐசி 814 வெப் சீரிஸ் சர்ச்சை: கந்தஹார் விமானக் கடத்தலில் உண்மையில் ஈடுபட்டது யார்?
பிரசுரிக்கப்பட்டது

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹா, மற்றும்​​ அவரது புதிய வெப் சீரிஸ் குறித்து தற்போது காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது.

'ஐசி 814' என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் ஓ.டி.டி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இது கந்தஹார் விமானக் கடத்தலை அடிப்படையாகக் கொண்டது.

இந்தத் தொடரை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் எழுந்தது.

சில சமூக ஊடக பயனர்கள் #IC814, #BoycottNetflix, #BoycottBollywood போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலதிகத் தகவல்கள் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)