You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்திய என்னை யாரும் பாராட்டவில்லை' - டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று (ஜூன் 5) செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், இந்தியாவையும், பாகிஸ்தானையும் தடுத்து நிறுத்தியதில் பெருமை கொள்கிறேன்." என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இரு நாடுகளும் அணுஆயுதங்களை வைத்துள்ளன. அதைப் பயன்படுத்தும் நிலை வந்திருக்கும். இரு தரப்பிலும் புத்திசாலியான, நல்ல நபர்களிடம் பேசினேன். இப்போது இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் வர்த்தக விவகாரங்களில் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறினேன். ஆனால், ஒருவரை ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, அணுஆயுதங்களை பயன்படுத்த ஆயத்தமானால் அது எங்களையும் பாதிக்கும்.
ஏனென்றால், அணுஆயுதத்தின் தாக்கம் கடல் வழியாக மிக வேகமாகப் பரவும் என்பது உங்களுக்கும் தெரியும், அது எங்களைப் பாதிக்கும். அதை நீங்கள் செய்வதாக இருந்தால், வர்த்தகம் ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை எனக் கூறினேன். அந்த மோதலை நிறுத்தினேன். அதற்கான உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டார்களா எனப் பார்க்க முடியாது. அதைச் செய்திருப்பார்கள் என நம்பலாம்." என்றார்.
மேலும், இந்தியப் பிரதமர் மோதி குறித்துப் பேசிய டிரம்ப் "இந்தியாவின் தலைவர் ஒரு சிறந்த மனிதர். சில வாரங்களுக்கு முன் இங்கு வந்திருந்தார். நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம், வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டோம். அதேபோல பாகிஸ்தானும் வலுவான தலைமையைக் கொண்டுள்ளனர். இதைக் கூறுவது சிலருக்குப் பிடிக்காது,
ஆனால் அது உண்மை. அவர்கள் போரை நிறுத்தினார்கள். இப்போது எனக்குப் பாராட்டு கிடைக்குமா? எதற்காகவும் கிடைக்காது. அவர்கள் என்னை எதற்காகவும் பாராட்ட மாட்டார்கள். ஆனால், இதை வேறு யாராலும் செய்திருக்க முடியாது. நான் அதைச் செய்தேன், அதனால் பெருமை கொள்கிறேன்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு