நீலகிரி: சாலையை புலி கடந்து சென்ற காட்சி

காணொளிக் குறிப்பு, நீலகிரியில் சாலையை கடந்து சென்ற புலி
நீலகிரி: சாலையை புலி கடந்து சென்ற காட்சி
பிரசுரிக்கப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு யானைகள், புலிகள், சிறுத்தைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பகுதியில் சாலை வழியாக பயணிக்கும் மக்கள் அவ்வப்போது வன விலங்குகளைப் பார்ப்பதுண்டு.

அவ்வாறு இன்று மாயார் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. இதனை அவ்வழியாக வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்தனர். புலிகள் சாலையில் தென்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு