You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் தீவிரமாகும் மழை: மிக்ஜாம் புயல் எங்கு கரையைக் கடக்கும்?
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பபட்டுள்ளது.
அதன்படி, இன்றும், நாளையும் வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது 20.4 செ.மீக்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. மிக்ஜாம் புயல் நாளை தமிழகத்தை ஒட்டி கடக்கவுள்ளதால், 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், நாளை சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளித்த தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)