"கடவுளுக்கே பாடம் எடுப்பவர் பிரதமர்" - ராகுல் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

காணொளிக் குறிப்பு, "கடவுளுக்கே பாடம் எடுப்பவர் பிரதமர்" - ராகுல் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
"கடவுளுக்கே பாடம் எடுப்பவர் பிரதமர்" - ராகுல் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது

வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை அவமதிப்பதையே ராகுல் காந்தி வேலையாகக் கொண்டிருப்பதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

"பிரதமர் நரேந்திர மோதி கடவுளுக்கு பக்கத்தில் அமர்ந்து அவருக்கே இந்த பிரபஞ்சத்தைப் பற்றி பாடம் எடுப்பார்.

கடவுளுக்கே நாம் என்ன படைத்திருக்கிறோம் என குழப்பம் வந்துவிடும்," என ராகுல் கிண்டல் விமர்சனத்தை முன்வைத்துள்ளதற்குத் தான் பாஜக கடும் எதிர்வினையாற்றியுள்ளது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மக்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி செல்லும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இது.

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல், வழக்கம்போல இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

பிரதமர் நரேந்திர மோதி கடவுளுக்கு பக்கத்தில் அமர்ந்து அவருக்கே இந்த பிரபஞ்சத்தைப் பற்றி பாடம் எடுப்பார். கடவுளுக்கே நாம் என்ன படைத்திருக்கிறோம் என குழப்பம் வந்துவிடும் என பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: