சென்னையில் விடிய விடிய பெய்த மழை

சென்னையில் விடிய விடிய பெய்த மழை
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் புதன்கிழமை மாலை முதல் விடாது பெய்த மழையால் கொரட்டூர், ராயபுரம், அண்ணா நகர், முகப்பேர், கோடம்பாக்க்கம், தி.நகர், மேற்கு மாம்பலம் என நகரின் பல்வேறு பகுதிகளில் சென்னையில் மழைநீர் சூழந்துள்ளது.

தி.நகர் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. மழை நீரில் மின்சாரம் தாக்கி தி.நகரில் ஒருவர் உயிரிழந்து விட்டார். மேலும் மேற்கு மாம்பலத்திலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் 4ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளுக்கு இடையில் புயல் கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)